SELANGOR

கிள்ளான், ஷா ஆலம், கோல சிலாங்கூரில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

25 மே 2023, 4:52 AM
கிள்ளான், ஷா ஆலம், கோல சிலாங்கூரில் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்பியது

ஷா ஆலம், மே 25- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில்

உடைந்த குழாயைப் பழுதுபார்க்கும் பணி முழுமைப் பெற்றதைத்

தொடர்ந்து கிள்ளான், ஷா ஆலம் மற்றும் கோல சிலாங்கூரில் உள்ள 99

இடங்களில் நீர் விநியோகம் இன்று காலை 9.00 மணிக்கு வழக்க

நிலைக்குத் திரும்பியது.

நீர் விநியோகத் தடையின் போது பொறுமைகாத்த அப்பகுதி மக்களுக்குப்

நன்றி தெரிவித்துக் கொள்வதாகப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர்

நிறுவனம் கூறியது.

அட்டவணையிடப்படாத இந்த நீர் விநியோகத் தடை ஏற்பட்ட காலத்தில்

மிகவும் பொறுமையுடன் இருந்த அனைத்து வாடிக்கையாளர்களுக்கும்

நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று அந்நிறுவனம் தனது பேஸ்புக்

பதிவில் குறிப்பிட்டுள்ளது.

பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில் உடைந்த

குழாயைப் பழுதுபார்க்கும் பணியை ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கடந்த

22ஆம் தேதி மேற்கொண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.