SELANGOR

புக்கிட் செராக்காவில் உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது- நீரை விநியோகிக்கும் பணி தொடங்கியது

23 மே 2023, 3:54 AM
புக்கிட் செராக்காவில் உடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது- நீரை விநியோகிக்கும் பணி தொடங்கியது

ஷா ஆலம், மே 23- பண்டார் புஞ்சா ஆலம், ஜாலான் புக்கிட் செராக்காவில்

உடைந்த குழாயை பழுதுபார்க்கும் பணி இன்று அதிகாலை 3.00 மணிக்கு

முழுமையடைந்ததாகப் பெங்குருசான் ஆயர் சிலாங்கூர் நிறுவனம்

கூறியது.

நீர் விநியோக முறை நிலைப்படுத்தப்பட்டவுடன் பாதிக்கப்பட்ட

பகுதிகளுக்கு நீரை விநியோகிக்கும் பணி கட்டங் கட்டமாகமேற்கொள்ளப்படும் என்று அது தெரிவித்தது.

நீர் விநியோகம் பிரிவு வாரியாக வழக்க நிலைக்குத் திரும்பும். முதலாம்

பிரிவில் மே 24ஆம் தேதி நள்ளிரவு 12.00 மணிக்கும் இரண்டாம் பிரிவில்

அன்றைய தினம் இரவு 9.00 மணிக்கும் நீர் விநியோகம் வழக்க நிலைக்குத்

திரும்பும் என ஆயர் சிலாங்கூர் நிறுவனத்தின் அகப்பக்கத்தில்

குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டவணையிடப்படாத நீர் விநியோகத் தடை தொடர்பான மேல்

விபரங்களை பொது மக்கள் ஆயர் சிலாங்கூர் பேஸ்புக், இண்ஸ்டாகிராம்,

டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக அல்லது 15300 என்ற

தொலைபேசி எண்கள் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.