ஈப்போ மே 22- தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்திற்கு 19 ஆயிரம் வெள்ளி மானியத்தை மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.கடந்த வாரம் ஈப்போ இம்பியானா ஹோட்டலில் நடைபெற்ற இந்த நிதி வழங்கும் நிகழ்வில் மனிதவள அமைச்சர் வி.சிவக்குமார் சார்பில் மலேசிய தொழிற்சங்க பதிவு இலாகாவின் தலைமை இயக்குனர் கமால் பின் பாட்லி தலைமைத் தாங்கினார்.
இந்த நிகழ்வில் 189 தொழிற்சங்கங்களுக்கு மொத்தம் 26 லட்சம் வெள்ளி மானியம் வழங்கப்பட்டது. இதில் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 19,000 வெள்ளிப் பெற்றது.
தேசியத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் சார்பாக சிலாங்கூர் மாநில செயலாளர் வை.தாமாசேகரன், பேராக் மாநில தலைவர் ரசாக் மற்றும் மாநில செயலாளர் மு. குணாசன் ஆகியோர் மானியத்தை பெற்றுக் கொண்டனர்.
தொழிற்சங்கங்களை சேர்ந்த கமிட்டி உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம்கள் நடத்துவதற்கு ஏதுவாக தொழிற்சங்கங்களுக்கு இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதனிடையே 19,000 வெள்ளியை வழங்கிய மனிதவள அமைச்சர் சிவகுமாருக்கு தேசிய தோட்டத் தொழிற்சங்கம் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டது
ECONOMY
189 தொழிற்சங்கங்களுக்கு மனிதவள அமைச்சு 26 லட்சம் வெள்ளி மானியம்- தோட்டத் தொழிலாளர் சங்கம் வெ.19,000 பெற்றது
22 மே 2023, 4:48 PM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
RS-2: சிலாங்கூரின் வளர்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் சமமாக இருக்க வேண்டும் – பொருளியல் நிபுணர்
lau sook may
2 செப்டெம்பர் 2026

selangor
சிலாங்கூர் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வர்த்தக சமூகத்துடன் கலந்துரையாடல்
Media Selangor Team
18 ஆகஸ்ட் 2026

national
தாமதமாகும் திருமணம் , அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு; பிறப்பு விகிதம் குறையக் காரணம்
Bernama
17 ஆகஸ்ட் 2026

வகைpbt
உங்கள் கருத்து என்ன?



