SELANGOR

கிள்ளான் சுற்றுலா புகைப்படப் போட்டி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

20 மே 2023, 9:16 AM
கிள்ளான் சுற்றுலா புகைப்படப் போட்டி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், மே 20: கடந்த மே 10ஆம் தேதி தொடங்கி ஜூன் 15ஆம் தேதி வரை நடைபெறும் கிள்ளான் சுற்றுலா புகைப்படப் போட்டி 2023 இல் பங்கேற்கப் பொதுமக்கள் அழைக்கப்படுகின்றனர்.

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து மலேசிய குடிமக்களுக்கும் இப் போட்டியில் பங்கேற்கலாம். மேலும், இப்போட்டியில் பங்கேற்க கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை என்றும் முகநூல் மூலம் சுற்றுலா சிலாங்கூர் தெரிவித்துள்ளது.

'கிள்ளான் க்கோ ஆரா பண்டாரயா 2023' என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடத்தப்படும் இப்போட்டியில் வழங்கப்படும் மொத்த பரிசுகளின் மதிப்பு கிட்டத்தட்ட RM5,000 ஆகும்.

இப்போட்டியின் வெற்றியாளருக்கு RM1,500 ரொக்கப் பரிசு வழங்கப்படும். மேலும், இரண்டாம் இடத்திற்கு (RM1,000), மூன்றாம் இடத்திற்கு (RM500) மற்றும் RM250 மதிப்புள்ள ஏழு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்படும்.

இப்போட்டியில் கிள்ளானில் உள்ள வரலாற்று கட்டிடங்களின் அழகு, வாழ்க்கை முறை (நிகழ்வுகள் அல்லது கலாச்சாரம் தொடர்பானது) மற்றும் இயற்கை அழகு ஆகிய மூன்று பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

பங்கேற்பாளர்கள் https://forms.gle/1a1a8AasB5A9gUu27 என்ற இணைப்பின் மூலம் நுழைவுப் படிவத்தைப் பூர்த்தி செய்து போட்டியில் பங்கேற்கலாம்.

எந்தவொரு கேள்விக்கும் சுற்றுலா மற்றும் கலாச்சாரப் பிரிவு, சமூகத் துறை, கிள்ளான் நகராண்மை கழகத்தை 03-3375 5555/1013/1015 அல்லது 016-657 0753 (நளினி) அல்லது 010-501 7339 (ஷுஹாடா) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.