SELANGOR

திரளாக மக்கள் காஜாங்  ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள வானிலை தடையாக இல்லை

20 மே 2023, 7:18 AM
திரளாக மக்கள் காஜாங்  ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொள்ள வானிலை தடையாக இல்லை

உலு லங்காட், மே 20: கடுமையான வெப்ப வானிலை, காஜாங் நகராண்மை கழகத்தின் ஐடில்பித்ரி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் வருகையாளர்கள் கலந்து கொள்வதில் தடையாக இல்லை. இந்நிகழ்வில் சுமார் 1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

வருகையாளர்களுக்கு ஆடு வறுவல், சாத்தே, லக்சா, பிரியாணி, லெமாங், ரெண்டாங் போன்ற பல வகையான உணவுகள் வழங்கப்பட்டன.

காஜாங் நகராண்மை கழக சமூக சேவை துறையின் கலாச்சார பிரிவின் பாடல் நிகழ்ச்சியும் விருந்தினர்களை மகிழ்வித்தது.

இந்நிகழ்வில் காஜாங் நகராண்மை கழக தலைவர்  நஜ்முடின் ஜெமைன், உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான், பாங்கி நாடாளுமன்ற உறுப்பினர் சையரெட்சன் ஜோஹன் மற்றும் சுங்கை ராமால் மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் மஸ்வான் ஜோஹர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.