SELANGOR

அன்னையர் தினத்தை முன்னிட்டு மலை ஏறும் நிகழ்வு ஏற்பாடு

20 மே 2023, 7:16 AM
அன்னையர் தினத்தை முன்னிட்டு மலை ஏறும் நிகழ்வு ஏற்பாடு

ஷா ஆலம், மே 20: மே 13 அன்னையர் தினத்தை முன்னிட்டு கோலாலம்பூர் ஈஸ்ட் பார்க் மலையின் இயற்கை அழகை ரசிக்க 40 பெண்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பண்டார் உத்தாமா தொகுதியின் தொண்டர் படை பெண்கள் மையம் (PWB) ஏற்பாடு செய்த இந் நிகழ்ச்சி, தாய்மார்களுக்கு வழங்கும் ஒரு அங்கீகாரத்தை , அவர்களின் அர்பணிப்பை நாங்கள் பாராட்டுவதன் அடையாளம் என்றார் அவர்

கேஎல் ஈஸ்ட் பார்க் மற்றும் டெகாத்லோன் மலேசியா ஒன்றினைந்து  ஏற்பாடு செய்த இந்த திட்டம், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் அழகை ரசிக்க பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பை வழங்கியது என்று மேற்பார்வையாளர் அலிசியா யாப் யூ சுவான் கூறினார்.

"பங்கேற்பாளர்களுக்குப் பூக்கள், விலங்குகள் மற்றும் குவார்ட்ஸ் கற்கள் பற்றிய தகவல்களும் வழங்கப்பட்டன, ஏனெனில் அந்த மலை கில்லாங்கேட்ஸ்  மலையின் ஒரு பகுதியாகும்," என்று அவர் கூறினார்.

பண்டார் உத்தாமா மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடினும் இரண்டு கிலோமீட்டர் மலை ஏறும் நிகழ்வில் கலந்து கொண்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.