SELANGOR

RM50க்குக் குறைந்த விலையில் ஆண்களுக்கு முடிதிருத்தம் பயிற்சி - கிள்ளான் நகராட்சி கழகம்

20 மே 2023, 3:14 AM
RM50க்குக் குறைந்த விலையில் ஆண்களுக்கு முடிதிருத்தம் பயிற்சி  - கிள்ளான் நகராட்சி  கழகம்

ஷா ஆலம், மே 20: மே 28 அன்று கிள்ளான் நகராட்சி கழகம் ஏற்பாடு செய்துள்ள

RM50 க்குக் குறைந்த விலையில் ஆண்கள் முடி திருத்தம் பயிற்சியில் பொதுமக்கள் கலந்து

கொள்ளலாம்.

கிள்ளான் மாவட்டச் சமூக மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இந்த நிகழ்வு ஜாலான் தெங்கு

கிளனாவில் உள்ள மின் நூலக ஆடிட்டோரியத்தில் உள்ள சிறிய மண்டபத்தில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது.

வால்டர் கல்லூரியின் அனுபவம் வாய்ந்த பயிற்றுவிப்பாளர்களால் வழிநடத்தப்படும்

இந்த நிகழ்வில் 25 முதல் 45 வயதுக்குட்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொள்ளலாம்

என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இத்திட்டம் 40 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது மற்றும்

வழங்கப்பட்ட QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நிபந்தனைகள் மற்றும் பதிவு

படிவத்தைப் பெறலாம் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

கிள்ளான் நகராட்சி கழகத்தால் பங்கேற்பாளர்களுக்கு ஒரு முழுமையான மின் கற்றல்

புத்தகமும் வழிக்காட்டலாக வழங்கப்படும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.