SELANGOR

நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

19 மே 2023, 7:19 AM
நாளை ஒன்பது இடங்களில் மாநில அரசின் மலிவு விற்பனை

ஷா ஆலம், மே 19- சந்தையை விட குறைவான விலையில்

அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதற்குரிய வாய்ப்பினை வழங்கும்

மாநில அரசின் மலிவு விற்பனை நாளை மேலும் ஒன்பது இடங்களில்

நடைபெறவுள்ளது.

சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த

விற்பனை மோரிப், கம்போங் சுங்கை புவாயா, சுங்கை பீலேக் தாமான்

டேசா விஸ்தா, சுங்கை பெசார் பாரிட் அனாம் ஆகிய இடங்களில் காலை

10.00 மணி முதல் நடைபெறும்.

மேலும் பாயா ஜெராஸ், சவுஜானா உத்தாமா அன்-நுர் பள்ளிவாசல், மேரு,

ஐ-டத்தாரான் மேரு, சுங்கை ஆயர் தாவார் டத்தாரான் தானா லேசேன்

பாரிட் பாரு, ஸ்ரீ செர்டாங், புத்ரா பெர்மாய் எம்.பி.எஸ்.ஜே. சமூக மண்டபம்

ஆகிய இடங்களில் இந்த விற்பனை நடைபெற ஏற்பாடு

செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, டிங்கில் ஸ்ரீ ஏசான் போலீஸ் நிலையம் எதிரே உள்ள திடல்

மற்றும் பெண்டாமார் இண்டா, ஜாலான் டாமார் மேரா ஆகிய

இடங்களிலும் இந்த மலிவு விற்பனை பிற்பகல் 1.00 மணி வரை

நடைபெறவிருக்கிறது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்

முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரசி 10.00 வெள்ளிக்கும்

விற்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.