SELANGOR

ஆசிரியர் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டம் ஏற்பாடு

17 மே 2023, 9:39 AM
ஆசிரியர் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினத்தை முன்னிட்டு சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டம் ஏற்பாடு

ஷா ஆலம், மே 17: ஆசிரியர் தினம், அன்னையர் தினம், செவிலியர் தினத்தை முன்னிட்டு மே 24 மற்றும் 25- ஆம் தேதிகளில் சமையல் எண்ணெய் மறுசுழற்சி திட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சி பழைய செலாயாங் நகராட்சி கட்டிடத்தின் முகப்பில் காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை நடைபெறும் என்று செலாயாங் நகராட்சி தெரிவித்துள்ளது.

அன்றைய தினம் மூன்று கிலோவுக்கு மேல் சமையல் எண்ணெய்யைக் கொண்டு வரும் அதிர்ஷ்டசாலி வருகையாளர்கள், ஆறுதல் பரிசை வீட்டிற்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பை பெறுவார்கள் என்று முகநூல் மூலம் தெரிவிக்கப் பட்டுள்ளது.

மேலும், முதல் 100 பேருக்கு அதாவது ஆசிரியர்கள், செவிலியர்கள் மற்றும் தாய்மார்களுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்படும்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதன் மூலம் இயற்கையின் நிலைத் தன்மையைப் பேணுவதற்குப் பொதுமக்கள் தங்கள் ஆதரவைக் காட்டுமாறு செலாயாங் மாநகராட்சி ஊக்குவிக்கிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.