SELANGOR

ஈஜோக் இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா

16 மே 2023, 5:44 AM
ஈஜோக் இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் அன்னையர் தின விழா

பெஸ்தாரி ஜெயா, மே 16- அன்னையரின் அளப்பரிய சேவைகளையும்

ஈடில்லா அர்ப்பணிப்பு மற்றும் தியாக உணர்வையும் போற்றும் வகையில்

ஆண்டு தோறும் அன்னையர் தினம் உலகம் முழுவதும் வெகு சிறப்பான

முறையில் கொண்டாடப்படுகிறது.

இந்த உன்னத தினத்தில் தாய்மார்களைச் சிறப்பிக்கும் நிகழ்வு ஒன்றினை

ஈஜோக் தொகுதியின் இந்திய சமூகத் தலைவர் என். செல்வராஜூ

தலைமையிலான செயல்குழுவினர் சிறப்பான முறையில் ஏற்பாடு

செய்திருந்தனர்.

பெஸ்தாரி ஜெயா, தாமான் ஸ்ரீ இண்டா சமூக மண்டபத்தில் கடந்த

–ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த அன்னையர் தின நிகழ்வில்

முப்பதுக்கும் மேற்பட்ட அன்னையர்கள் கலந்து சிறப்பித்தனர்.

இந்த நிகழ்வுக்குச் சிறப்பு வருகை புரிந்து உரையாற்றிய பெர்மாத்தாங்

தொகுதி இந்திய சமூகத் தலைவர் கே.பத்மநாபன், அன்னையரின்

பெருமைகளையும் குடும்பத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் புரியும்

தியாகங்களையும் எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மூத்த அன்னையர் மாலை அணித்து

பொன்னாடை போர்த்தி சிறப்பிக்கப்பட்டனர். மேலும் அன்னையர் தின கேக்

வெட்டப்பட்டு நிகழ்வுக்கு வந்திருந்த அனைத்து அன்னையர்களுக்கும்

புடவை, தாம்பளம் உள்ளிட்ட பொருள்களும் அன்பளிப்பாக

வழங்கப்பட்டன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.