SELANGOR

திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு சுமார் 10,000 வருகையாளர்கள் எதிர்பார்ப்பு

12 மே 2023, 9:27 AM
திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சிக்கு சுமார் 10,000 வருகையாளர்கள் எதிர்பார்ப்பு

சபாக் பெர்ணம், மே 12: இன்று இரவு டத்தாரன் தனா லெசனில் நடைபெறும் ஜெலாஜா கித்தா சிலாங்கூர் ஐடில்பித்ரி (ஜேகேஎஸ்ஏ) திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் சுமார் 10,000 வருகையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விருந்தினர்களுக்கு 38 உணவு தயாரிப்பாளர்களிடம் இருந்து பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்படும் என சபாக் பெர்ணம் மாவட்டக் கவுன்சில் (MDSB) தலைவர் கூறினார்.

சுங்கை ஆயர் தாவரின் 12 கிராமங்களைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்கள் இன்று மாநில அரசின் திறந்த இல்ல உபசரிப்பை முன்னிட்டு ரேவாங் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினர்.

இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் இத் திறந்த இல்ல உபசரிப்பு விழாவில் டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள் மாநில அரசின் தலைமையுடன் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.