SELANGOR

கிளப் எஸ்.யு.கே. ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 2,000 பேர் பங்கேற்பு

12 மே 2023, 9:25 AM
கிளப் எஸ்.யு.கே. ஏற்பாட்டிலான நோன்புப் பெருநாள் உபசரிப்பில் 2,000 பேர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 12- இங்குள்ள சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா கட்டிடத்தின்

ஜூப்ளி பேராக் அரங்கில் இன்று நடைபெற்ற சிலாங்கூர் அரசு செயலக

கிளப்(எஸ்.யு.கே.) ஏற்பாட்டிலான நோன்பு பெருநாள் பொது உபசரிப்பில்

இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

காலை 10.00 முதல் நடைபெற்ற இந்த உபசரிப்பு நிகழ்வில் மந்திரி புசார்

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு பிரமுகராகக் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் மாநில அரசு செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம், கிளப்

எஸ்.யு.கே. ஆலோசகர் டத்தின் ஃபாடியா சாபியான் மாநில ஆட்சிக்குழு

உறுப்பினர்களான ஹீ லோய் சியான் மற்றும் டாக்டர் சித்தி மரியா

மாமுட் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

அரசு செயலக ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 11 உணவு

மையங்களுக்கு வருகை புரிந்த மந்திரி பெசார் எஸ்.யு.கே. பாலர்

பள்ளியில் பயிலும் 21 மாணவர்களுக்கு நோன்புப் பெருநாள் ரொக்க

அன்பளிப்பை வழங்கினார்.

இந்நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக டத்தோ மாலிக்

ரிட்டுவான் மற்றும் டத்தோ கத்திஜா இப்ராஹிம் இசை நிகழ்ச்சியும்

நடைபெற்றது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.