SELANGOR

சிலாங்கூரில் 15 டயாலிசிஸ் மையங்கள் அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும்- மந்திரி புசார்

10 மே 2023, 7:44 AM
சிலாங்கூரில் 15 டயாலிசிஸ் மையங்கள் அடுத்தாண்டு செயல்படத் தொடங்கும்- மந்திரி புசார்

ஷா ஆலம், மே 10- மாநிலத்தில் நீரிழிவு நோயாளிகளின் தேவையை

ஈடுசெய்வதற்காக அடுத்தாண்டு தொடங்கி 15 டயாலிசிஸ் இரத்த

சுத்திகரிப்பு மையங்கள் செயல்படும் என்று மந்திரி புசார் கூறினார்.

டயாலிசிஸ் நோயாளிகளுக்கு உதவும் நோக்கில் ஏற்கனவே ஐந்து

டயாலிசிஸ் மையங்கள் இயங்கி வந்த வேளையில் கூடுதலாக

அத்தகைய10 மையங்களை அமைக்க மாநில அரசு இணக்கம்

தெரிவித்துள்ளதாக டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

கடந்த 2010ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இலவச டயாலிசிஸ்

சேவைத் திட்டத்தில் மேலும் 10 மையங்களை இணைப்பதன் மூலம்

அடுத்தாண்டில் இம்மையங்களின் எண்ணிக்கை 15ஆக உயரும் என்று

அவர் தனது பேஸ்புக் பதிவில் கூறினார்.

ஐந்து டயாலிசிஸ் மையங்களுடன் கடந்த 2010ஆம் ஆண்டு முதல்

செயல்பட்டு வந்த புசாட் டயாலிசிஸ் ராக்யாட் என்றத் திட்டம் தற்போது

டயாலிசிஸ் மெஸ்ரா சிலாங்கூர் என்ற பெயரில் உருமாற்றம்

செய்யப்படுவதாக நகர்ப்புற நல்வாழ்வுத் துறைக்கான ஆட்சிக்குழு

உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில் முன்னதாக கூறியிருந்தார்.

புதிய டயாலிசிஸ் மையங்கள் கிள்ளான், அம்பாங், செலாயாங் போன்ற

பகுதிகளில் உள்ள மக்கள் குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்படும் என்றும்

அவர் தெரிவித்திருந்தார்.

ஒவ்வொரு டயாலிசிஸ் மையத்திலும் மாதம் 200 பேர் வரை இரத்த

சுத்திகரிப்பு சேவையைப் பெற்று வருகின்றனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.