SELANGOR

சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை இன்று மேலும் 9 இடங்களில் நடைபெறும்

10 மே 2023, 2:26 AM
சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை இன்று மேலும் 9 இடங்களில் நடைபெறும்

ஷா ஆலம், மே 10- சிலாங்கூர் அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு

விற்பனை இன்று மேலும் ஒன்பது இடங்களில் காலை 10.00 மணி முதல்

பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

மாநிலத்தின் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகளில் இந்த விற்பனை

மேற்கொள்ளப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக்

கழகம் (பி.கே.பி.எஸ்.) கூறியது.

ஆறு அத்தியாவசியப் பொருள்களை மலிவான விலையில் விற்பனை

செய்யும் இந்த இயக்கம் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் கெடாய் தோக்

ரம்லி அசாமிலும் பண்டார் பாரு தொகுதியின் தாமான் ஸ்ரீ பெக்கான் அல்-

ஃபாலா சூராவிலும் தாமான் மேடான் தொகுதியிலுள்ள பி.கே.என்.எஸ்.

அடுக்குமாடி குடியிருப்பின் அல்-ஹிடாயா சூராவிலும் நடைபெறும்.

மேலும், சுங்கை ராமால் தொகுதி நிலையிலான மலிவு விற்பனை சுங்கை

தங்காசிலும் பந்திங் தொகுதி நிலையிலான விற்பனை பண்டார் சுங்கை

இமாஸ் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியிலும் சுங்கை பாஞ்சாங் தொகுதி

நிலையிலான விற்பனை சிம்பாங் லோஜி சூராவ் தாபிஷிலும் நடைபெற

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர சபாக் தொகுதியின் பாரிட் 4 தீமோர் சுங்கை பெசாரிலும்

சுங்கை துவா தொகுதியின் பங்சாபுரி லக்ஸமணா ஜெயா கார்

நிறுத்துமிடத்திலும் உலு பெர்ணம் தொகுதியின் டத்தாரான் கெடாய் பத்து

பெல்டா சுஹார்த்தோவிலும் இந்த விற்பனை நடைபெறும் என்று

அக்கழகம் தனது பேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்

முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00

வெள்ளிக்கும் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் சமையல் எண்ணெய் 5 கிலோ 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.