SELANGOR

பண்டார் உத்தாமா தொகுதியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனை

9 மே 2023, 8:15 AM
பண்டார் உத்தாமா தொகுதியில் நாளை தொடங்கி 3 நாட்களுக்கு இலவசச் சுகாதாரப் பரிசோதனை

ஷா ஆலம், மே 9- பண்டார் உத்தாமா தொகுதி ஏற்பாட்டில் நாளை 10ஆம்

தேதி தொடங்கி 12ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு இலவச

மருத்துவப் பரிசோதனை இயக்கம் டாமன்சாரா உத்தாமா, எஸ்எஸ்21 சமூக

மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த

பரிசோதனை இயக்கத்தில் மன நல மற்றும் உடல் நல

பரிசோதனைகளோடு கண் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்று

தொகுதி ஒருங்கிணைப்ளர் ஹனிஸ் முகமது கூறினார்.

உடல் பரிசோதனை மற்றும் கண்பரிசோதனைத் திட்டத்தை நாங்கள்

அடிக்கடி அதாவது மாதம் ஒரு முறை நடத்தி வருகிறோம். எனினும்,

முதன் முறையாக இப்போது மன நல பரிசோதனையும்

மேற்கொள்ளவிருக்கிறோம் என்றார் அவர்.

இந்த பரிசோதனை இயக்கத்தில் தினசரி 200 பேர் வரை கலந்து கொண்டு

தங்கள் உடல் மற்றும் நலத்தைச் சோதித்துக் கொள்வார்கள் எனத் தாங்கள்

எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த மருத்துவப் பரிசோதனை இயக்கத்தையொட்டி

நடத்தப்படவிருந்த இரத்த தான இயக்கம் தவிர்க்க முடியாத

காரணங்களால் ரத்து செய்யப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.