SELANGOR

உலக ஊடகச் சுதந்திர குறியீடு 2023 இல் மலேசியாவுக்கு 73 வது இடம் 

3 மே 2023, 9:11 AM
உலக ஊடகச் சுதந்திர குறியீடு 2023 இல் மலேசியாவுக்கு 73 வது இடம் 

கோலாலம்பூர், மே 3: எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) அறிக்கையின் அடிப்படையில் உலக ஊடக சுதந்திர குறியீடு 2023 இல் மலேசியா 73 வது இடத்தில் உள்ளது. அதே வேளையில் கடந்த ஆண்டு 133 வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது மலேசியா 40 படிகள் முன்னேறி 62.83 புள்ளிகளைப் பதிவு செய்துள்ள நிலையில் முந்தைய ஆண்டில் 51.55 புள்ளிகளுடன் 113வது இடத்தில் இருந்தது.

ஆசியானில் மலேசியா உயர்ந்த இடத்தில் உள்ளது,  இந்த பட்டியலில் தாய்லாந்து (106) இந்தோனேசியா (108) சிங்கப்பூர் (129), பிலிப்பைன்ஸ் (132), புருணை (142), கம்போடியா (147), லாவோஸ் (160), மியான்மர் (173) மற்றும் வியட்நாம் (178) ஆகிய இடங்களில் உள்ளன.

எல்லைகளற்ற நிருபர்கள் (RSF) இணையதளத்தில் வெளியிடப்பட்ட இந்த தகவல், உலகம் முழுவதும் உள்ள 180 நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள ஊடக பயிற்சியாளர்களின் சுதந்திரத்தின் அளவை ஒப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

- பெர்னாமா

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.