SELANGOR

பண்டான் இண்டா தொகுதியில் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு- அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுகள் வெல்ல வாய்ப்பு

3 மே 2023, 7:43 AM
பண்டான் இண்டா தொகுதியில் நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு- அதிர்ஷ்டக் குலுக்கில் பரிசுகள் வெல்ல வாய்ப்பு

ஷா ஆலம், மே 3- பண்டான் இண்டா சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்

நோன்பு பெருநாள் பொது உபசரிப்பு வரும் சனிக்கிழமை அம்பாங்,

கம்போங் பண்டான் டாலாம் நுருள் ஹிடாயா பள்ளிவாசல் அருகே

நடைபெறவுள்ளது.

இரவு 7.45 மணி தொடங்கி 11.30 மணி வரை நடைபெறும் இந்த

உபசரிப்பில் கலந்து கொள்வோருக்காக 80 அதிர்ஷ்டக் குலுக்குப் பரிசுகளும்

ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருந்து நிகழ்வில் பல்வேறு வகையான உணவுப் பதார்த்தங்கள்

வருகையாளர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வேளையில் மலேசிய

தகவல் இலாகா கலைஞர்களின் இசைப்படைப்புகளும் இடம் பெறும் என்று

பண்டான் இண்டா தொகுதி சேவை மையத்தின் நோரிஷா ஜைன்

கூறினார்.

இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொள்ளும் முதல் 500 வருகையாளர்கள்

அதிர்ஷ்டக் குலுக்கில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பினைப் பெறுவர்.

அதிர்ஷ்டசாலிகளுக்குக் குளிர்சாதனப் பெட்டி, மடிக்கணினி, கையடக்க

கணினி மற்றும் சைக்கிள் போன்ற கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்படும்

என அவர் சொன்னார்.

இது தவிர, இந்நிகழ்வில் கலந்து கொள்ளும் 600 சிறார்களுக்கு நோன்புப்

ரொக்க அன்பளிப்பும் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.