SELANGOR

சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக முகமது பவுஸி நியமனம்- எம்.பி.ஏ.ஜே. தலைவராக அனி அகமது பொறுப்பேற்றார்

3 மே 2023, 6:03 AM
சுபாங் ஜெயா டத்தோ பண்டாராக முகமது பவுஸி நியமனம்- எம்.பி.ஏ.ஜே. தலைவராக அனி அகமது பொறுப்பேற்றார்

ஷா ஆலம், மே 3- அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைவர்

முகமது பவுஸி முகமது யாத்திம் உள்பட நான்கு மாநில அரசின் உயர்

அதிகாரிகள் புதிய பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

முகமது பவுஸி சுபாங் ஜெயா மாநகர் மன்றத்தின் டத்தோ பண்டாராக

நியமிக்கப்பட்டுள்ளதாகச் சிலாங்கூர் மாநில அரசு செயலகம் தனது பேஸ்புக்

பதிவில் கூறியது.

முகமது பவுஸி விட்டுச் சென்ற அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்

தலைவர் பதவியை உலு லங்காட் மாவட்ட அதிகாரி டாக்டர் அனி அகமது

ஏற்கவுள்ளார். அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகத்தின் தலைவர்

பொறுப்பை ஏற்கும் முதல் பெண்மணியாக இவர் விளங்குகிறார்.

டாக்டர் அய்னியின் இடத்தை பெட்டாலிங் மாவட்ட அதிகாரி முகமது

ஜூஸ்னி ஹஷிம் நிரப்பவுள்ளார்.

இதனிடையே, முகமது ஜூஸ்னியின் பதவிக்குக் கோல சிலாங்கூர்

நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் நியமனம் பெறுகிறார்.

இவர்களின் பதவி நியமனச் சடங்கு இங்குள்ள மாநில அரசு தலைமைச்

செயலகத்தின் மாநிலச் செயலாளர் டத்தோ ஹரிஸ் காசிம் தலைமையில்

நேற்று நடைபெற்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.