SELANGOR

சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

2 மே 2023, 3:44 AM
சகோதரிகள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

கோத்தா திங்கி, மே 2: தஞ்சோங் செடிலியில் உள்ள தஞ்சோங் பூலோ கடற்கரையில் நேற்று மதியம் இரண்டு சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

சித்தி நூர்சலினா ஜொஹாரி (10) மற்றும் சித்தி ரபியா ஜொஹாரி (13), ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ துறை உறுதிப்படுத்திய தாகச் செபானா கோவ் உதவி தீயணைப்புத் தலைவர் முகமட் கைருல் சுஃபியன் தஹாரி தெரிவித்தார்.

பிற்பகல் 3.39 மணி அளவில் அவரது தரப்புக்கு இந்த சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததை அடுத்து பிபிபி பெனாவரில் இருந்து ஒன்பது உறுப்பினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

" அங்கு ஒரு குடும்பத்தில் நான்கு பேர் நீரில் மூழ்கியது கண்டறியப்பட்டது.

" அச்சகோதரிகளின் தாயான மெர்சிடிதா யூனோஸ் (46) மற்றும் சலேஹா ஹரோன் (27) ஆகிய இருவரும் பொதுமக்களால் வெற்றிகரமாக மீட்கப்பட்டு அவர்களுக்கு ஆரம்ப சிகிச்சை அளிக்கப்பட்டது," என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

சித்தி நூர்சலினா மற்றும் சித்தி ரபியா ஆகியோரின் உடல்கள் மேல் நடவடிக்கைகளுக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக முகமட் கைருல் சுஃபியான் தெரிவித்தார்.

இதற்கிடையில், கோத்தா திங்கி மாவட்டக் காவல்துறை தலைவர் ஹுசின் ஜமோரா சம்பவ அறிக்கையைப் பெற்றதை உறுதிப்படுத்தினார். மேலும் இது குறித்த அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

– பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.