SELANGOR

சனிக்கிழமை தொடங்கி ஏழு இடங்களில் மலிவு விற்பனை- மேரு தொகுதி ஏற்பாடு

27 ஏப்ரல் 2023, 10:31 AM
சனிக்கிழமை தொடங்கி ஏழு இடங்களில் மலிவு விற்பனை- மேரு தொகுதி ஏற்பாடு

ஷா ஆலம், ஏப் 27- இம்மாதம் 29ஆம் தேதி தொடங்கி மே 11ஆம் தேதி

வரை ஏழு இடங்களில் ஜெலாஜா ஏசான் ராக்யாட் மலிவு விற்பனையை

மேரு சட்டமன்றத் தொகுதி நடத்தவுள்ளது.

இவ்வாண்டில் இதுவரை நடத்தப்படாத இடங்களை தாங்கள் அடையாளம்

கண்டு இந்த மலிவு விற்பனைக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மேரு

சட்டமன்ற உறுப்பினரின் சிறப்பு அதிகாரி நோர்லினா நயான் கூறினார்.

வரும் 29ஆம் தேதி சூராவ் டாருள் அமின் (ஏப். 29), நுருள் ஜன்னா

பள்ளிவாசல் (மே 2), சூராவ் ஹாஜி அலியாஸ் (மே 3), தாமான் சாகா (மே

6), ஜாலான் தெம்பானிஸ் (மே 7), தாமான் காப்பார் பெர்மாய் (மே 8), சூராவ்

ஹாஜி நர்சோம் (மே 11) ஆகிய இடங்களில் இந்த மலிவு விற்பனை

நடைபெறவுள்ளது என அவர் குறிப்பிட்டார்.

பெருநாள் காலத்தின் போது பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய நிதிச்

சுமையைக் குறைப்பதில் இந்த மலிவு விற்பனை ஓரளவு துணை புரியும்

என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என அவர் மேலும் சொன்னார்.

இவ்வாண்டு ஜனவரி முதல் இதுவரை இத்தொகுதியில் நடத்தப்பட்ட 25

மலிவு விற்பனைகளின் வாயிலாக 10,000 பேர் வரை

பயனடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தினால் நடத்தப்படும்

இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும் இறைச்சி ஒரு

பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேட்டு முட்டை ஒரு தட்டு 10.00

வெள்ளிக்கம் கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும் 5 கிலோ

சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10.00

வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.