SELANGOR

ஆயர் சிலாங்கூர் இணையக் கட்டணச் சேவையை வைத்திருப்பவர்களுக்கு RM5 மதிப்புள்ள செட்தைம் ``Chatime`` வவுச்சர்கள் வழங்கப்படும்

25 ஏப்ரல் 2023, 5:52 AM
ஆயர் சிலாங்கூர் இணையக் கட்டணச் சேவையை வைத்திருப்பவர்களுக்கு RM5 மதிப்புள்ள செட்தைம் ``Chatime`` வவுச்சர்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 25: இணையக் கட்டணச் சேவை (இ-பில்லிங்) மூலம் பதிவு செய்த ஆயர் சிலாங்கூர் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு RM5 மதிப்புள்ள மொத்தம் 10,000 செட் டைம் ``Chatime`` பானங்களுக்கான வவுச்சர்கள் வழங்கப்படுகின்றன.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு புதிய இ-பில் வாடிக்கையாளர்களுக்கு மார்ச் 28 முதல் மே 23 வரை இச்சலுகை வழங்கப்படும் என்று ஆயர் சிலாங்கூர் தெரிவித்தது.

"இந்த அற்புதமான வாய்ப்பைத் தவறவிடாதீர்கள்! 10,000 செட்டைம் வவுச்சர்கள் புதிய இ-பில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும்.

"இப்போது மின் கட்டணத்திற்குப் பதிவு செய்து, ஆயர் சிலாங்கூர் செயலி மூலம் உங்கள் நீர் கட்டணத்தை செலுத்துங்கள்" என்று முகநூலில் தெரிவிக்கப்பட்டது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை www.airselangor.com/air-selangor-x-chatime-campaign-2023/ என்ற இணைப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆயர் சிலாங்கூர் இ-பில் பதிவு செய்வதற்கான ஐந்து எளிய வழிமுறைகள்:

  • ஆயர் சிலாங்கூர் செயலியைப் பதிவிறக்கவும்

  • இ-பில்லில் பதிவு செய்யவும்

  • அச்செயலி மூலம் கட்டணத்தைச் செலுத்துவது

  • ஒரு தனிப்பட்ட குறியீடு வெற்றியாளருக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும்

  • வவுச்சர்களை அருகிலுள்ள செட் டைம் கிளைகளில் பயன்படுத்தி கொள்ளவும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.