SELANGOR

செலமாட் பாஹி சுபாங் ஜெயா – கார் இல்லாத நாள் நிகழ்ச்சி - சுபாங் ஜெயா மாநகராட்சி

19 ஏப்ரல் 2023, 7:56 AM
செலமாட் பாஹி சுபாங் ஜெயா – கார் இல்லாத நாள் நிகழ்ச்சி - சுபாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், ஏப்ரல் 19: சுபாங் ஜெயா மாநகராட்சி மீண்டும் செலமாட் பாஹி சுபாங் ஜெயா – கார் இல்லா நாள் நிகழ்ச்சியை அடுத்த மே மாதம் நடத்தவுள்ளது. இதில் பொதுமக்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகள் உள்ளன.

சுபாங் ஜெயாவின் துணை மேயர் முகமட் சுல்குர்னைன் சே அலி, க்ரைடீரியம் பைக் ரேஸ், கார்லூட் மார்க்கெட் மற்றும் கரோக்கே போட்டி போன்ற பல நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என்றார்.

"அது தவிர, நாங்கள் கூடைப்பந்து கிங் ஆஃப் தி ஸ்ட்ரீட் மற்றும் ஸ்ட்ரீட் சாக்கர் போட்டிகளையும் ஏற்பாடு செய்கிறோம்.

"இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அதிகமான வருகையாளர்களை ஈர்க்க கூடுதல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன,``என்றார்.

ஓட்டம், நடைபயிற்சி, நிதானமாகச் சைக்கிள் ஓட்டுதல் போன்ற மற்ற நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று அவர் கூறினார்.

காலை உணவு விருந்து, முஸ்லிம் அல்லாத உணவு வாகனங்கள், சுற்றுச்சூழல் இலவசச் சந்தை, இலவசச் சுகாதாரப் பரிசோதனை, ஏஜென்சி கண்காட்சி, வில்வித்தை நடவடிக்கைகள், ரோப் ராப்பல்லிங் மற்றும் அதிர்ஷ்ட குலுக்கல் ஆகிய நடவடிக்கைகளும் இடம்பெறும்.

அடுத்த மாத செலமாட் பாஹி சுபாங் ஜெயா – கார் இல்லா நாள் நிகழ்ச்சி மே 7 அன்று ஏயோன் பிக் சுபாங் ஜெயா மற்றும் சுபாங் பரேட் வணிக வளாகத்தில் நடைபெறும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.