SELANGOR

மலிவு விற்பனையில் ஒரு மணி நேரத்திற்குள் மொத்தம் 200 கோழிகள் விற்கப்பட்டன

19 ஏப்ரல் 2023, 7:43 AM
மலிவு விற்பனையில் ஒரு மணி நேரத்திற்குள் மொத்தம் 200 கோழிகள்   விற்கப்பட்டன

ஷா ஆலம், ஏப்ரல் 19: கோப்ராசி வர்கா ஹிஜ்ரா சிலாங்கூர் பெர்ஹத் நடத்தும் எஹ்சான் ஐடில்பித்ரி 2023 மெகா விற்பனை திட்டத்தின் மூலம் ஒரு மணி  நேரத்திற்குள் மொத்தம் 200 கோழிகள் இங்கு விஸ்மா கோஹிஜ்ராவில் விற்கப்பட்டன.

அதன் பொது மேலாளர் முகமது சுக்ரி இஸ்மாயில், வருகையாளர்கள் தரும் வரவேற்பு ஊக்கமளிப்பதாக இருந்ததாகவும், மாலை 4 மணிக்கு விற்பனை தொடங்குவதற்கு முன்பே அவர்கள் வரத் தயாராக இருப்பதாகவும் கூறினார்.

"இந்த விற்பனைக்கு, நாங்கள் 200 கோழிகளைக் கொண்டு வந்தோம், அவை ரிம10 க்கு விற்கப்பட்டன. அதுமட்டுமில்லாமல், வாடிக்கையாளர்களுக்காக கூடுதலாக 100 கோழிகள் மற்றும் மீன்களை  நாங்கள் கொண்டு வந்தோம்.

இதற்கிடையில், தனது தரப்பு புதிய இறைச்சி, முட்டை, சர்க்கரை,  சமையல் எண்ணெய் மற்றும் பிஹுன் போன்ற பல பொருட்களையும் கொண்டு வந்ததாக முகமது சுக்ரி கூறினார்.

"வருகையாளர்கள் ஊக்கமளிக்கும்  கருத்துக்களையும் தெரிவித்தனர் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.