SELANGOR

ஐடில்பித்ரி எஹ்சான் மெகா விற்பனை மேலும் சில இடங்களில் நடத்தப்படும்

19 ஏப்ரல் 2023, 7:36 AM
ஐடில்பித்ரி எஹ்சான் மெகா விற்பனை மேலும் சில இடங்களில் நடத்தப்படும்

ஷா ஆலம், ஏப்.19: ஐடில்பித்ரி எஹ்சான் மெகா விற்பனை இன்னும் சில இடங்களில் நடத்தப்படும். இது அதிகமான குடியிருப்பாளர்களுக்கு ராயா தேவைகளைப் பெறுவதை எளிதாக்குகிறது.

சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகத்துடன் (PKPS) விநியோகம், மனித வளம் மற்றும் இருப்பிடம் ஆகிய அம்சங்களை ஆய்வு செய்து இந்த விவகாரம் விவாதிக்க பட்டு வருவதாக வேளாண் நவீனமயமாக்கல் எஸ்கோ கூறினார்.

“இந்த விற்பனையை தங்கள் இடத்தில் நடத்த வேண்டும் என்று குடியிருப்பாளர்கள் இடமிருந்து பல கோரிக்கைகள் வந்துள்ள காரணமாக இது அவர்களின் சுமையைக் குறைக்க உதவும்.

"இருப்பினும், முடிவெடுப்பதற்கு முன் அதை சீர்தூக்கி பார்க்க வேண்டும். இந்த விற்பனையை ராயாவுக்கு முன்பாக இன்னும் ஓரிரு இடங்களில் ஏற்பாடு செய்ய முயற்சித்து வருகிறோம்" என்று ஐ ஆர் இசாம் ஹாஷிம் கூறினார்.

இந்த விற்பனை கடந்த ஆண்டு மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான மூன்று மாதங்களில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குடியிருப்பாளர்கள் பயனடைந்தனர்.

அதனைத் தொடர்ந்து மாநில அரசு ஜனவரி 16 முதல் மே வரை 1,200 இடங்களுக்கு மலிவு விற்பனையை விரிவுபடுத்தியது.

ஐடில்பித்ரியை முன்னிட்டு சனிக்கிழமை முதல் நாளை வரை 23 இடங்களில் மெகா விற்பனை நடைபெறும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.