SELANGOR

புயலால் சேதமடைந்த 18 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைக் காஜாங் மாநகராட்சி சரி செய்தது

18 ஏப்ரல் 2023, 7:32 AM
புயலால் சேதமடைந்த 18 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைக் காஜாங் மாநகராட்சி சரி செய்தது

ஷா ஆலம், ஏப்ரல் 18: காஜாங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை புயலால் சேதமடைந்த 18 குறைந்த விலை அடுக்குமாடி குடியிருப்புகளின் கூரைகளைக் காஜாங் மாநகராட்சி (எம்பிகேஜே) சரி செய்தது.

அதன் தலைவர் நஜ்முடின் ஜெமைன் கூறுகையில், அதில் 16 குடியிருப்புகள் ஜாலான் 6c/11, பண்டார் பாரு பாங்கியில் உள்ளன, மற்ற இரண்டு வீடுகள் புக்கிட் மேவா 6 ஆம் கட்டம், காஜாங் உத்தாமாவில் உள்ளன.

"மாநில அரசு செயலகத்தின்  பேரிடர் பிரிவு (SUK) மூலம் கிடைக்கப்பெறும் ஒதுக்கீட்டிற்கு முன் பழுது பார்ப்பு செலவிற்கு முதலில் உதவுமாறு காஜாங் மாநகராட்சிக்கு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

நஜ்முடின் கூற்றுப்படி, புயல் தாமான் இம்பியன் எஹ்சான் மற்றும் காஜாங் உத்தாமாவில் உள்ள பல ரமலான் பஜார் கடைகளையும் சேதப்படுத்தியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.