SELANGOR

ஷா ஆலம் மற்றும் கிள்ளான் பகுதிகளுக்குப் பிரதமர் வருகை புரிய உள்ளார்

17 ஏப்ரல் 2023, 7:11 AM
ஷா ஆலம் மற்றும் கிள்ளான் பகுதிகளுக்குப் பிரதமர் வருகை புரிய உள்ளார்

ஷா ஆலம், ஏப்ரல் 17: ஏப்ரல் 19-ம் தேதி மடாணி மலேசியா ரம்லான் திட்டத்தை முன்னிட்டு ஷா ஆலம் மற்றும் கிள்ளான் பகுதிகளுக்குப் பிரதமர் வருகை தர உள்ளார்.

ஏப்ரல் 19-ம் தேதி அன்று மாலை பிரதமர் ஷா ஆலம் பிகேஎன்எஸ் ரம்லான் பஜார்களின் வியாபாரிகளை சந்திப்பார்.

பின்னர் செமெந்தாவில் உள்ள அஹ்மதி மசூதியில் கிள்ளான் மக்களுடன் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்ளவுள்ளார்.

புத்ராஜெயாவை வழிநடத்தியதில் இருந்து, பிரதமர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு சிலாங்கூரில் மக்களைச் சந்தித்துள்ளார். அதில் அவர் ஏப்ரல் 8 அன்று ஷா ஆலமின் கம்போங் பாரு   ஹைகோமில் உள்ள மக்கள் வீட்டுத் திட்டத்தில் (பிபிஆர்) நாம் - நமக்கே (கே2கே) திட்டத்தை நிறைவு செய்தார்.

சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூரில் உள்ள சமூகத்தை மேம்படுத்துவதற்காக மக்கள் வீட்டுத் திட்டத்திற்கு RM35 மில்லியன் கூடுதல் ஒதுக்கீட்டைப் பிரதமர் அறிவித்தார்.

மேலும், அவர் பிப்ரவரி 9 அன்று சிலாங்கூர் பல்கலைக்கழகத்திற்கு (யுனிசெல்) வருகை புரிந்தார். பிரதமராகப் பதவியேற்றப் பிறகு அவர் பார்வையிட்ட முதல் உள்ளூர் உயர்கல்வி நிறுவனமாகும்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.