SELANGOR

1,000 வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள தள்ளுபடி  கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன

13 ஏப்ரல் 2023, 4:09 AM
1,000 வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள தள்ளுபடி  கூப்பன்கள் விநியோகிக்கப்பட்டன

ஷா ஆலம், ஏப்ரல் 12: இங்குள்ள ரம்லான் ரஹ்மா பஜார் செக்‌ஷன் 19யில் வாங்குதல் மற்றும் விற்பதில் ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் 1,000 வருகையாளர்களுக்கு RM10 மதிப்புள்ள தள்ளுபடி கூப்பன்கள்  விநியோகிக்கப்பட்டன.

ஷா ஆலம் மாநகராட்சி (எம்பிஎஸ்ஏ) மேயர் டாக்டர் நோர் ஃபுவாட் அப்துல் ஹமிட், மேபேங்குடன் இணைந்து மேற்கொள்ளும் இந்த திட்டம், மக்கள் மேபேங்க்2யூ விண்ணப்பத்தின் மூலம் அதை பெற்று கொள்ள வேண்டும் என்றார்.

"தள்ளுபடி குறியீட்டுடன் வருகையாளர்கள் தள்ளுபடியை பெறுவார்கள். பணமில்லா கலாச்சாரத்தை ஊக்குவிப்பதோடு மட்டுமில்லாமல், உணவுகள் வாங்கும் போது தூய்மைக்கும் உத்தரவாதம் அளிக்கிறது, ”என்று அவரைச் சந்தித்தபோது கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், வறுமை மற்றும் பசி இல்லாத நிலையான சமூக நகரங்களின் வளர்ச்சி இலக்கை அடைவதற்கான உறுதிப்பாட்டில் இணங்க வகையில் ஷா ஆலம் மாநகராட்சியின் இந்த திட்டம் உள்ளது.

ஒவ்வொரு வாடிக்கையாளரும் பொருள்கள் வாங்கும் கடைகளில் இந்த தள்ளுப்படி குறியீட்டைப் பயன்படுத்தும் போது, குறைந்தபட்சம் RM6 வாங்கினால் RM5 தள்ளுபடியைப் பெறுகிறார்கள்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.