SELANGOR

100 உணவு விநியோகம் செய்பவர்கள் பிரிஹாதின் ரமலான் ஃபுட் ரைடர் திட்டத்தில் RM50 எரிபொருள் வவுச்சர்களைப் பெற்றனர்

12 ஏப்ரல் 2023, 8:43 AM
100 உணவு விநியோகம் செய்பவர்கள் பிரிஹாதின் ரமலான் ஃபுட் ரைடர் திட்டத்தில் RM50 எரிபொருள் வவுச்சர்களைப் பெற்றனர்

ஷா ஆலம், ஏப்ரல் 12: புக்கிட் மெலாவத்தி தொகுதியில் மொத்தம் 100 உணவு விநியோகம் செய்பவர்கள் பிரிஹாதின் ரமலான் ஃபுட் ரைடர் திட்டத்தில் RM50 எரிபொருள் வவுச்சர்களைப் பெற்றனர்.

புக்கிட் மெலாவத்தி தொகுதி வாக்காளர்களாக இருப்பதோடு B 2 உரிமம் சட்டப் பூர்வமாகப் பதிவு செய்த உணவு விநியோகம் செய்பவர்களுக்கு இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அதன் பிரதிநிதி கூறினார்.

ஜுவைரியா சுல்கிஃப்லி, இந்த உதவியானது, ரமலான் காலத்தில்  சம்பந்தப்பட்ட குழுவின் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது, என்றார்.

"இந்த நிகழ்ச்சி நடத்தப்படுவது இதுவே முதல் முறை மற்றும் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் வாழ்க்கையில் பணம் சம்பாதிப்பதில் விடாமுயற்சியுடன் இருக்கும் உணவு விநியோக நண்பர்களை இதன்மூலம் வரவேற்க முடிந்தது என்றார்.

"இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக்க உதவிய பிரையன் இங் யி மின் மற்றும் புக்கிட் மெலாவத்தி தொகுதியின் பிபிஎஸ் (சிலாங்கூர் இளைஞர் அணி) குழுவிற்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்" என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.