SELANGOR

``லம்புக் கஞ்சி சமையல்`` போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM1,000 பரிசு - கிள்ளான் மாநகராட்சி

11 ஏப்ரல் 2023, 4:51 AM
``லம்புக் கஞ்சி சமையல்`` போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM1,000 பரிசு - கிள்ளான் மாநகராட்சி

ஷா ஆலம், ஏப்ரல் 11: கிள்ளான் நகராட்சி, இந்த சனிக்கிழமை அன்று கிள்ளானில் உள்ள கோத்தா ராஜா அரங்கத்தில் 2023 கிள்ளான் நகராட்சியின் ``லம்புக் கஞ்சி சமைக்கலாம்`` போட்டியில் வெற்றி பெறுபவருக்கு RM1,000 வழங்கவுள்ளது.

கிள்ளான் மாவட்ட ரம்லான் கொண்டாட்டத்தை முன்னிட்டு நடக்கவிருக்கும் இப்போட்டியில் இரண்டாம் மூன்றாம் இடங்களுக்கு RM500, RM250 மற்றும் 12 ஆறுதல் பரிசுகளாக RM700 வழங்கப்படும் என்று உள்ளூர் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

"இந்தப் போட்டியானது 18 வயதுக்கு மேற்பட்ட முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட அனைத்து மலேசிய குடிமக்களும் பங்கேற்கலாம். முதலில் பதிவு செய்யும் 15 அணிகளுக்கு மட்டுமே இப்போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டும்.

"பதிவு செய்யும் இறுதி தேதி ஏப்ரல் 14 ஆகும். 15 அணிகள் பதிவு செய்து விட்டால் அத்தேதிக்கு முன்பாக விண்ணப்பம் மூடப்படும்" என்று முகநூல் மூலம் தெரிவிக்கப்பட்டது.

பங்கேற்பு இலவசம் என கிள்ளான் மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும் தகவலுக்கு லுக்மான் மாட் நூர் (012 259 5851) அல்லது ஷாஹிபுல் ராதி (013 235 2518)ஐ தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.