SELANGOR

டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா தாருடின் தொழில்முனைவோர் கெம்பாக் விருதைப் பெற்றார்

10 ஏப்ரல் 2023, 9:44 AM
டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா தாருடின் தொழில்முனைவோர் கெம்பாக் விருதைப் பெற்றார்

ஷா ஆலம், ஏப்ரல் 10: மாலாவத்தி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற ஜெம்பாக் தொழில்முனைவோர் நிகழ்வில் தொழில்முனைவோர் கெம்பாக் விருது பெறுபவராக டத்தோஸ்ரீ சித்தி நூர்ஹலிசா தாருடின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தகவல் தொடர்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில்  அவர்களால் அந்த விருது வழங்கப்பட்டது. சித்தி நூர்ஹலிசா அவர்களி௦ன் நிறுவனமான ``CTDK Holdings Sdn Bhd`` பதிவு செய்த வெற்றியின் விளைவாக இந்த விருது வழங்கப்பட்டது.

சிலாங்கூர் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் பொருளாதாரக் கழகம் (Sidec) இந்த விருதை முதன்முறையாக அறிமுகப்படுத்தியதுடன், பாராட்டு மற்றும் ஆதரவின் அடையாளமாக மேலும் ஒன்பது தொழில்முனைவோரைத் தேர்ந்தெடுத்தது.

அவற்றில் பிரபலமான பால் நிறுவனங்களான ``Farm Fresh Berhad``, ``CUCKOO International Sdn Bhd`` மற்றும் ``Siti Kadijah Apparel Sdn Bhd`` ஆகியவை அடங்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.