SELANGOR

ஹரி ராயா ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் -  500 பண்டார் உத்தாமா தொகுதி  வாக்காளர்கள் பெற்றனர்

2 ஏப்ரல் 2023, 4:25 AM
ஹரி ராயா ஐடில்ஃபித்ரியை முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் -  500 பண்டார் உத்தாமா தொகுதி  வாக்காளர்கள் பெற்றனர்

பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 2: பண்டார் உத்தாமா தொகுதியில் மொத்தம் 500 வாக்காளர்கள்  ஹரி ராயா ஐடில்ஃபித்ரி முன்னிட்டு ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் RM200 பெறுவர்.

ஜோம் ஷாப்பிங் வவுச்சர்கள் அடுத்த வாரம் முதல் கட்டங்கட்டமாக விநியோகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.

"இத்திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யும் இறுதி நாள் மார்ச் 30 ஆகும். தற்போது மொத்தம் 500 பெறுநர்கள் வவுச்சரைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.

"இருப்பினும், இன்னும்,  நாங்கள்  தகுதியான பெறுநர்கள் உண்மையான எண்ணிக்கையைச் சரிபார்த்து வருகிறோம்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

பண்டார் உத்தாமா தொகுதியில் வாக்காளர்களாக இருக்கும் மாத வருமானம் RM2,000 அல்லது அதற்கும் குறைவாக கொண்ட விண்ணப்பதாரர்களுக்கு தனது தரப்பு முன்னுரிமை அளிக்க இருப்பதாக ஜமாலியா கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.