SELANGOR

உணவு விநியோகம் செய்பவர்களுக்கு RM50 மதிப்புள்ள இலவச எரிபொருள் வவுச்சர்கள் வழங்கப்படும்

2 ஏப்ரல் 2023, 3:42 AM
உணவு விநியோகம் செய்பவர்களுக்கு RM50 மதிப்புள்ள இலவச எரிபொருள் வவுச்சர்கள் வழங்கப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 2: கோல சிலாங்கூர், புக்கிட் மெலாவதி தொகுதி உணவு விநியோகம் செய்பவர்களுக்கு RM50 மதிப்புள்ள இலவச எரிபொருள் வவுச்சர்களை வழங்குகிறது.

அன்றாட கடமைகளை மேற்கொள்ளும் போது அத்தரப்பினரின் எரிபொருள் செலவினங்களின் சுமையைக் குறைக்க இந்த திட்டம் மேற்கொள்ளப்பட்டதாக அதன் பிரதிநிதி ஜுவைரியா சுல்கிப்லி தெரிவித்தார்.

"இந்த நிகழ்ச்சியை மாநிலச் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் (ADN), புக்கிட் மெலாவதி தொகுதியின் PeBS (சிலாங்கூர் இளைஞர் அணிதிரட்டல்) உடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது.

"இது புக்கிட் மெலாவதி தொகுதி வாக்காளர், B2 உரிமம் மற்றும் பதிவு செய்யப்பட்ட உணவு விநியோக நபராக இருப்பது உள்ளிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது" என்று அவர் முகநூல் மூலம் தெரிவித்தார்.

தகுதியான உணவு விநியோகம் செய்பவர்கள் ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன் புக்கிட் மெலாவதி மாநிலச் சட்டமன்ற சமூகச் சேவை அலுவலகத்தில் விண்ணப்ப படிவத்தைப் பெற அழைக்கப்படுகிறார்கள் என்று அவர் விளக்கினார்.

ஏதேனும் கேள்விகளுக்குத் திரு. அலியை 010-8055086 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளவும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.