SELANGOR

மைஎம்பிஎஸ் 2022 அதிர்ஷ்டக் குலுக்கில் 11 வெற்றியாளர்களுக்கு மொத்தம் RM25,000 பணப் பரிசு

2 ஏப்ரல் 2023, 3:35 AM
மைஎம்பிஎஸ் 2022 அதிர்ஷ்டக் குலுக்கில் 11 வெற்றியாளர்களுக்கு மொத்தம் RM25,000 பணப் பரிசு

ஷா ஆலம், ஏப்ரல் 2:  மைஎம்பிஎஸ் 2022 அதிர்ஷ்டக் குலுக்கில் 11 வெற்றியாளர்கள் மொத்தம் RM25,000 பணத்தை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். "இந்த அதிர்ஷ்டக் குலுக்கல் ‘’ MyMPS’’மைஎம்பிஎஸ் போர்ட்டலை விளம்பரப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மைஎம்பிஎஸ் என்பது பல்வேறு எம்பிஎஸ்  பில்களுக்கான பயனர் நட்பு மற்றும்  இணைய சேவை மூலம் செலாயாங் மாநகராட்சிக்கு முறையாக கட்டணத்தை செலுத்தும் தளமாக  மேம்படுத்தி வருகிறது

எம்.பி.எஸ் டவர் லாபியில் செலாயாங் மாநகராட்சி (எம்.பி.எஸ்) துணைத் தலைவர் அடி பைசல் அஹ்மட் தர்மிசி அப்பரிசை வழங்கினார்.

இரண்டு அதிர்ஷ்டசாலிகள் தலா RM5,000 ரொக்கமாகப் பெற்றனர், மற்றவர்கள் RM1,500 மற்றும் RM1,000 பணத்தைப் பெற்றனர் என்றுஎம்பிஎஸ் கார்ப்பரேட் துறையின் துணை இயக்குநர் கூறினார்.

“கடந்த ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி மொத்தம் 53 வெற்றியாளர்களின் பெயர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன. அதில் நேற்று 11 முக்கிய வெற்றியாளர்கள் பரிசுகளைப் பெற்றனர்.

"மற்ற 42 வெற்றியாளர்கள் தொடர்பு கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்கள் இணையப் பணப் பரிமாற்றம் மூலம் அந்தந்த பரிசுகளைப் பெறுவார்கள்" என்று அஹ்மட் ஃபௌசி இஷாக் நேற்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

மைஎம்பிஎஸ் 2022 அதிர்ஷ்டக் குலுக்கல் RM50,000 வரை ரொக்கப் பரிசுகளை வழங்குகிறது.

"இந்த திட்டம் 2020 இல் தொடங்கியது மற்றும் ஆரம்பத்தில் வாகனங்கள் மற்றும் மின்சார பொருட்கள் வடிவில் பரிசுகளை வழங்கப்பட்டன," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.