SELANGOR

இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை திட்டம் தொடரும்

2 ஏப்ரல் 2023, 3:23 AM
இன்று ஒன்பது இடங்களில் மலிவு விற்பனை திட்டம் தொடரும்

ஷா ஆலம், ஏப்ரல் 2: ஆறு அடிப்படைப் பொருட்களை குறைந்த விலையில் விற்க ஏற்பாடு செய்யப்பட்ட மலிவு விற்பனை திட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கி ஒன்பது இடங்களில் தொடரும்.

சுராவ் கம்போங் செப்பாகாட் (புக்கிட் மெலாவதி தொகுதி), கம்போங் புக்கிட் செராக்கா (ஈஜோக் தொகுதி), கம்போங் பாரு குண்டாங் சீனாவின் கூடைப்பந்து மைதானம் (குவாங் தொகுதி) மற்றும் பிளாட் பால்மா (ரவாங் தொகுதி) ஆகிய இடங்களில் மலிவு விற்பனை நடைபெறவுள்ளது.

மேலும், மேடன் பத்து கேவ்ஸ் (சுங்கை துவா தொகுதி), சுராவ் டருஸ்ஸலாம் ஜாலான் தெரத்தாய் 2/5 (தெரதாய் தொகுதி), தாமான் சாகா காப்பார் (மேரு தொகுதி), ஜாலான் பாலேம்பாங் பொது மண்டபம் (செமந்தா தொகுதி) மற்றும் பல்நோக்கு மண்டபம் பிரிவு 7 (கோத்தா டமன்சாரா) ஆகிய இடங்களிலும் இத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மக்களின் நல்ல வரவேற்பைத் தொடந்து, மாநில அரசு ஜனவரி 15 முதல் மே வரை 1,200 இடங்களில் இத்திட்டத்தை விரிவுபடுத்தியது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.