SELANGOR

 'ஜோம் ஹைக்கிங் பெர்சாமா ஒய்பி' எனும் மலை ஏறும் நடவடிக்கை ஏற்பாடு - ஸ்ரீ கெம்பாங்கன் தொகுதி

30 மார்ச் 2023, 9:16 AM
 'ஜோம் ஹைக்கிங் பெர்சாமா ஒய்பி' எனும் மலை ஏறும் நடவடிக்கை ஏற்பாடு - ஸ்ரீ கெம்பாங்கன் தொகுதி

ஷா ஆலம், மார்ச் 30: ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறும் 'ஜோம் ஹைக்கிங் பெர்சாமா ஒய்பி' மலை ஏறும் நடவடிக்கை திட்டத்தில் பங்கேற்க, ஆர்வமுள்ள தனிநபர்களைச் செரி கெம்பாங்கன் தொகுதி (DUN) அழைக்கிறது.

பிரதிநிதி இயன் யோங் ஹியான் வா கூறுகையில், பண்டார் உத்தாமா தொகுதி பாலகோங் தொகுதியுடன் இணைந்து இந்நிகழ்ச்சியைப் புக்கிட் செர்டாங்கில் காலை 6.30 மணிக்கு ஏற்பாடு செய்துள்ளது.

"இந்த நடவடிக்கையில் பங்கேற்க வயது வித்தியாசமின்றி 300 பங்கேற்பாளர்களை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம். இதற்கு நீங்கள் முன்கூட்டியே பதிவு செய்யாமல் நேரடியாக கலந்து கொள்ளலாம் அதாவது நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் நேரடியாகப் பதிவு செய்து கொள்ளலாம்.

"மக்கள் பிரதிநிதிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துவதுடன், சுகாதாரப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நடவடிக்கையாக இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்று அவரைத் தொடர்புகொண்டபோது கூறினார்.

சமூகத்தில் உடற்பயிற்சி செய்யும் பழக்கத்தை வளர்ப்பதுடன், சுற்றுச்சூழலை அணுகவும் ஆராயவும் இந்நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், அவ்வப்போது ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த மாநிலப் பிரதிநிதிகளின் சமூக ஊடகப் பக்கங்களைத் தொடர்ந்து பின்பற்றுமாறு பொதுமக்களை ஊக்குவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.