SELANGOR

எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் அலுவலகம் ஏற்பாடு - ஷா ஆலம் மாநகராட்சி

30 மார்ச் 2023, 4:37 AM
எதிர்வரும் சனிக்கிழமை நடமாடும் அலுவலகம் ஏற்பாடு - ஷா ஆலம் மாநகராட்சி

 ஷா ஆலம், மார்ச் 30: ஷா ஆலம் மாநகராட்சி, எதிர்வரும் சனிக்கிழமை அன்று, பிளாசா மசாலாம் பிரிவு 9-ன் வாகன நிறுத்துமிடத்தில் நடமாடும் அலுவலகத்தை அமைக்கிறது.

இச்சேவை பொதுமக்களின் வசதிக்காக காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை செயல்படும் என்று அதன் கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்புப் பிரிவின் தலைவர் தெரிவித்தார்.

" இமி என்பது வார இறுதி நாட்களில் கவுண்டருக்கு வராமல் டீல் செய்ய ஷா ஆலம் மாநகராட்சியால் வழங்கப் படும் ஒரு தளமாகும்.

"இந்த நடமாடும் அலுவலகம், மதிப்பீட்டு வரியை மதிப்பாய்வு செய்து செலுத்துதல், வாகன நிறுத்துமிட அபராதத்தை பரிசீலனை செய்து செலுத்துதல், புகார் கவுண்டர் மற்றும் பல சேவை வசதிகளை வழங்கும்" என்று ஷாரின் அகமட் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் சமூகத்தின் நலனுக்காக ஷா ஆலம் மாநகராட்சி சேவை முறை மேலும் வலுப்படுத்தப்படும் என்று நம்பப்படுகிறது என்றார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.