SELANGOR

ரமலான் பஜாருக்காகக் கூடுதலாக மூன்று இடங்கள்

30 மார்ச் 2023, 4:35 AM
ரமலான் பஜாருக்காகக் கூடுதலாக மூன்று இடங்கள்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 30: பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (எம்பிபிஜே) இந்த ஆண்டு ரமலான் பஜாருக்காக மூன்று இடங்களைக் கூடுதலாகச் சேர்த்துள்ளது. இந்த ஆண்டும் மொத்தம் 22 இடங்கள் ரமலான் பஜாருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

இம்முறை 35 சதவீதம் அதிகரித்துள்ள வர்த்தகர்களின் கோரிக்கையின் காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகப் பெட்டாலிங் ஜெயாவின் மேயர் தெரிவித்தார்.

"கடந்த ஆண்டின் 660 விண்ணப்பங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மொத்தம் 917 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மேலும் அனைத்து பஜார் இடங்களிலும் தோராயமாக 1,374 வணிக இடங்களை நாங்கள் வழங்குகிறோம்.

"தொற்றுநோய் காலத்தில் அமல்படுத்தப்பட்ட நடமாடும் கட்டுப்பட்டால் ஏற்பட்ட பிரச்சனையை களைந்து தற்போது குறுந்தொழில் முனைவோரின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு உதவுவதற்கான எங்களின் திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்" என்று முகமட் அஸான் முகமட் அமீர் கூறினார்.

ரமலான் பஜாரின் மூன்று புதிய இடங்கள்:

ஜாலான் செமாரா SD 3/2A, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா

ஜாலான் மெரண்தி எஸ்டி 13/4, பண்டார் ஸ்ரீ டாமன்சாரா

ஜாலான் PJS 8/12

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.