SELANGOR

யாவாஸ் பாலர் பள்ளி உதவித் நிதித் திட்டத்திற்கு ஏப்ரல் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

30 மார்ச் 2023, 1:48 AM
யாவாஸ் பாலர் பள்ளி உதவித் நிதித் திட்டத்திற்கு ஏப்ரல் 3 முதல் விண்ணப்பிக்கலாம்

ஷா ஆலம், மார்ச் 30- துனாஸ் எனப்படும் 2023ஆம் ஆண்டு சிலாங்கூர்

பாலர் பள்ளி உதவித் திட்டத்திற்கான பதிவு நடவடிக்கை வரும் ஏப்ரல்

மாதம் 3ஆம் தேதி தொடங்கவிருக்கிறது.

இந்த திட்டத்தின் கீழ் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 50

வெள்ளி உதவித் தொகை வழங்கப்படும் என்று யாவாஸ் எனப்படும்

யாயாசான் அனாக் சிலாங்கூர் அறவாரியம் கூறியது.

இந்த நிதி ரொக்கமாக வழங்கப்படாது மாறாக, https://tunasv2.yawas.my/admin/list_tadika.php . எனும் அகப்பக்கத்தில் பதிவு செய்த பாலர் பள்ளிகளிகளுக்கு நேரடியாக அனுப்பப்படும். இந்த அரிய வாய்ப்பினை நழுவ விடாதீர்கள் என்று யாவாஸ் தனது பேஸ்புக்

பக்கத்தில் கூறியது.

தகுதி உள்ளவர்கள்  http://tunas.yawas.my/ . எனும் அகப்பக்கம் வாயிலாக

இந்த திட்டத்திற்கு விண்ணப்பம் செய்யலாம். மேல் விபரங்களுக்கு 03-

5481 8800 எண்களில் அல்லது, யாவாஸ் சமூக ஊடகங்களின் வாயிலாகத்

தொடர்பு கொள்ளலாம்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.