SELANGOR

அம்பாங் ஜெயா மாநகராட்சி  புதிய ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான யோசனை (சிலாங்கூர் மாநிலக் கண்டுபிடிப்பு விருது) (ஐன்ஸ்) 2023 இல் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

28 மார்ச் 2023, 7:23 AM
அம்பாங் ஜெயா மாநகராட்சி  புதிய ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான யோசனை (சிலாங்கூர் மாநிலக் கண்டுபிடிப்பு விருது) (ஐன்ஸ்) 2023 இல் பங்கேற்கப் பொதுமக்களுக்கு அழைப்பு

ஷா ஆலம், மார்ச் 28: அம்பாங் ஜெயா மாநகராட்சி (எம்பிஏஜே), சிலாங்கூர் மாநில கண்டுபிடிப்பு விருது  (ஐன்ஸ்) 2023 இல் புதிய ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான யோசனைகள் வெளிப்படுவதை ஊக்குவிக்கப் பொதுமக்களை அழைக்கிறது.

இதில் பங்கேற்பவர்கள்  RM5,000 பரிசு தொகையுடன் உயர் கல்வி நிறுவனங்கள், பொது, தனியார் துறை, பள்ளிகள் மற்றும் மக்கள் உட்பட பல்வேறு பிரிவுகளில் போட்டியிடலாம்.

பங்கேற்பு இலவசம் மற்றும் எதிர்வரும் மே 31 அன்று பதிவு முடிவடையும். நுழைவுப் படிவம் மற்றும் வழிகாட்டுதல்களைப் பெற, ஐன்ஸ் சுவரொட்டியில் உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்.

மேலும் தகவல்களுக்குக் கார்ப்பரேட் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையை அல்லது  (நோரியானி ரோஸ்லானை) 03-4285 7404 அல்லது 7124 என்ற எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம்.

பங்கேற்பாளர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட படைப்புகளை அனுப்பலாம், அதே நேரத்தில் இப்படைப்புகள் இரண்டு ஆண்டுகளுக்குள் உருவாக்கப் பட்டவையாக இருக்க வேண்டும் (2021 முதல் 2023 வரை).

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.