SELANGOR

ஐடில்ஃபித்திரி பண்டிக்கையை முன்னிட்டு இலவச மொத்த வீட்டுக் குப்பை சேகரிப்பு சேவை

27 மார்ச் 2023, 6:43 AM
ஐடில்ஃபித்திரி பண்டிக்கையை முன்னிட்டு இலவச மொத்த வீட்டுக் குப்பை சேகரிப்பு சேவை

ஷா ஆலம், மார்ச் 27: சுபாங் ஜெயா மாநகராட்சி குடியிருப்பு பகுதிகளுக்கு ஐடில்ஃபிதித்ரி பண்டிக்கையை முன்னிட்டு இலவச மொத்த வீட்டு குப்பை சேகரிப்பு சேவையை வழங்குகிறது.

ஏப்ரல் 4 முதல் 18 வரை 15 நாட்களுக்கு KDEB கழிவு மேலாண்மை (KDEBWM) மூலம் இக்குப்பை சேகரிப்பு சேவை செயல்படுத்தப்படும் என பெருநிறுவன மற்றும் மூலோபாய மேலாண்மை துறையின் துணை இயக்குனர் கூறினார்.

"மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் இந்த சேவையில் சேர்க்கப்படவில்லை.

அஸ்ஃபரிசல் அப்துல் ரஷீத் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஐடில்ஃபிதித்ரி கொண்டாடும் குடியிருப்பாளர்களுக்கு இச்சேவையில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

அவரது கருத்துப்படி, சேவைக்காக KDEBWM 03-8081 4437 அல்லது WhatsApp (011-3558 4437) மூலம் ஏப்ரல் 3 முதல் 10 வரை விண்ணப்பம் செய்யலாம்.

"விண்ணப்பதாரர்கள் குப்பை சேகரிப்பு தேதியை நிர்ணைக்க KDEBWM ஆல் தொடர்பு கொள்ளப்படுவர். மேலும் குடியிருப்பாளர்கள் மொத்த குப்பைகளை வீட்டின் முன் வைக்க வேண்டும்," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.