SELANGOR

சிறந்த மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM500 மற்றும் RM300 ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்

27 மார்ச் 2023, 3:38 AM
சிறந்த மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM500 மற்றும் RM300 ரொக்க ஊக்கத்தொகை வழங்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 27: அம்பாங் ஜெயா மாநகராட்சி சிறந்த மதிப்பீட்டு வரி செலுத்துவோருக்கு RM500 மற்றும் RM300 ரொக்க ஊக்கத் தொகையை வழங்குகிறது.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்கு ஏற்ப வரி செலுத்துவோருக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது என்று நராண்மைக்கழக தலைவர் கூறினார்.

"இந்த ஊக்கத்தொகை வளாக உரிமையாளர்கள் மற்றும் சொத்து வைத்திருப்பவர்கள் வரி செலுத்த ஊக்குவிப்பதற்காக வழங்கப்படுகிறது.

"இந்தப் பணம் பெறுபவரின், ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் விண்ணப்பக் கணக்கில் வரவு வைக்கப்படும்" என்று முகமட் ஃபௌசி முகமட் யாதிம் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

ரொக்க ஊக்கத்தொகை இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் அம்பாங் ஜெயா மாநகராட்சி மேலும் தகவல்களை அவ்வப்போது தெரிவிக்கும்.

மேலும், அம்பாங் ஜெயா மாநகராட்சி நான்கு ஹோண்டா வேரியோ மோட்டார் சைக்கிள்களை பிரதான பரிசாக வழங்கும் அதிர்ஷ்டக் குலுக்கையும் நடத்தும் என முகமட் ஃபௌஸி கூறினார்.

" மற்றும் பரிசுகளை செல்வதற்காகவும், வளாகத்தின் உரிமையாளர் அல்லது சொத்து வைத்திருப்பவர் மதிப்பீட்டு வரியைச் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

''முழு மதிப்பீட்டு வரி பாக்கியையும் செலுத்த முடியாதவர்கள், தவணை முறையில் பணம் செலுத்துவதற்கு மெனரா எம்.பி.ஏ.ஜே.க்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தலாம்,'' என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.