ECONOMY

ஜோகூர் வெள்ளம்- பத்து பஹாட் மாவட்டத்தில் 419 பேர் நிவாரண மையங்களில் இன்னும் தஞ்சம்

26 மார்ச் 2023, 10:30 AM
ஜோகூர் வெள்ளம்- பத்து பஹாட் மாவட்டத்தில் 419 பேர் நிவாரண மையங்களில் இன்னும் தஞ்சம்

ஜோகூர் பாரு, மார்ச் 24- வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பத்து பஹாட் மாவட்டத்தில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி 419 பேர் இன்னும் துயர் துடைப்பு மையங்களில் தங்கியுள்ளனர். நேற்றிவு 8.00 மணிக்கு இந்த எண்ணிக்கை 439ஆக இருந்தது.

இம்மாவட்டத்தில் தொடர்ந்து செயல்படும் ஐந்து துயர் துடைப்பு மையங்களில் 113 குடும்பங்கள் இன்னும் தங்கியுள்ளதாக ஜோகூர் மாநில பேரிடர் மேலாண்மை செயலகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

ஸ்ரீ மேடான் தேசிய பள்ளியில் 209 பேரும் ஸ்ரீபெர்த்தாம் சமயப் பள்ளியில் அறுவரும் யோங் பெங் சமூக மண்டபத்தில் 129 பேரும் ஹூவா மின் சீனப்பள்ளியில் 21 பேரும் சாய் ஸ்ரீ சோமேல் மையத்:தில் 54 பேரும் அடைக்கலம் நாடியுள்ளனர்.

பெக்கோக் ஆற்றில் நீர் மட்டம் 19 மீட்டர் என்ற அளவில் தொடர்ந்து அபாயக் கட்டத்தில் இருந்து வரும் வேளையில் மாநிலத்தின் அனைத்து 10 மாவட்டங்களிலும் வானிலை இன்று காலை தெளிவாக உள்ளதாக அறிவிக்கப் பட்டுள்ளது

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.