SELANGOR

மதியம் 12 மணி நிலவரப்படி நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது

25 மார்ச் 2023, 7:44 AM
மதியம் 12 மணி நிலவரப்படி நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது

ஷா ஆலம், மார்ச் 25: நீர் விநியோகத் தடை யால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மதியம் 12 மணி நிலவரப்படி நீர் வழங்கல் மறுசீரமைப்பு நிலை 18.2 சதவீதத்தை எட்டியுள்ளது.

பெங்குருசான் ஆயர் பயனர்களுக்கு நீர் விநியோகத்தை மீட்டெடுப்பதற்கான கால அவகாசம் பயனரின் வளாகத்தின் இருப்பிடம் மற்றும் தூரத்தைப் பொறுத்து ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்கு வேறுபடும்.

இன்று ஓர் அறிக்கையில், ஆயர் சிலாங்கூர், நீர் வழங்கல் அமைப்பு உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, பயனரின் வளாகத்திற்கு நீர் விநியோகம் படிப்படியாக விநியோகிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

நாளை காலை 6 மணிக்கு நீர் விநியோகம் முழுமையாக சீரமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நேற்றிரவு 10 மணிக்கு கிள்ளானில் தாமான் முத்தியாரா புக்கிட் ராஜா 2இல் உடைந்த குழாய் சரி செய்யும் பணியால் கிள்ளான் மற்றும் ஷா ஆலமில் உள்ள 55 பகுதிகளில் திட்டமிடப்படாத தண்ணீர் விநியோகத் தடை  ஏற்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.