SELANGOR

யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன் அடைந்துள்ளனர்

25 மார்ச் 2023, 5:06 AM
யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் மூலம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன் அடைந்துள்ளனர்

ஷா ஆலம், மார்ச் 25: இந்த மார்ச் மாத நிலவரப்படி யாயாசன் ஹிஜ்ரா சிலாங்கூர் (ஹிஜ்ரா) பல்வேறு கடன் நிதித் திட்டங்கள் மூலம் மொத்தம் 4,253 இந்திய தொழில் முனைவோர் பலன் அடைந்துள்ளனர்.

``i-Bisnes, Zero to Hero, Niaga Darul Ehsan (NaDI), Go Digital, i-Lestari, I, i-Agro, i-bermusim`` ஆகிய ஏழு திட்டங்களின் மூலம் வணிகங்களை மேம்படுத்த சம்பந்தப்பட்ட குழுக்களுக்கு RM52,000 க்கும் அதிகமான நிதி விநியோகிக்கப்பட்டது என்று அதன் செயல் தலைமை நிர்வாக அதிகாரி கூறினார்.

"இந்த திட்டமானது வருமானத்தை ஈட்டுவதற்கு, திறமையான சிறுதொழில் முனைவோராக மாறுவதற்கும் அவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்துவது, மாநிலத்தின் விரைவான முன்னேற்றத்திற்கு ஏற்ப இந்திய சமூகத்தின் வளர்ச்சியை உறுதி செய்யப்படும்.

"45 சதவீத ஆண்கள் மற்றும் 55 சதவீதப் பெண்களைக் கொண்ட இந்த தொழில் முனைவோர் குழுவிற்கு இதுவரை 5,645 மதிப்புமிக்க நிதி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன," என்று சிலாங்கூர் கினி தொடர்பு கொண்டபோது நார்மைசா யாஹ்யா கூறினார்.

2015 ஆம் ஆண்டு நிறுவப் பட்டதில் இருந்து, ஹிஜ்ரா 55,834 தொழில்முனைவோருக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வரை RM710 மில்லியன் ஒதுக்கீட்டில் உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி சமர்ப்பித்த சிலாங்கூர் பட்ஜெட் 2023 இல் ஹிஜ்ரா திட்டத்தை மேம்படுத்தவும், தொழில் முனைவோர்களின் வளர்ச்சிக்கு உதவவும் RM130 மில்லியன் ஒதுக்கப்பட்டது.

மக்களைக் கவனித்துக்கொள்வதற்கான திட்டத்தின் கீழ் நிதியுதவி பெற http://mikrokredit.selangor.gov.my/e-hijrah/login மற்றும் www.hijrahselangor.com என்ற இணைப்பில் மேலும் தகவலுக்குப் பார்வையிடலாம்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.