SELANGOR

சுங்கை பூலோவில் நீர் வடிகால் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது - இன்ஃப்ராசெல்

25 மார்ச் 2023, 5:04 AM
சுங்கை பூலோவில் நீர் வடிகால் பழுது பார்க்கும் பணி மேற்கொள்ளப்பட்டது - இன்ஃப்ராசெல்

ஷா ஆலம், மார்ச் 25: இன்ஃப்ராசெல் இங்குள்ள ஜாலான் பெர்சிம்பங்கன் ஜாலான் வெல்ஃபேர் மற்றும் இண்டஸ்ட்ரி 9, சுங்கை பூலோவில் நீர் வடிகால் பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டது.

கடந்த செவ்வாய்கிழமை @infrasel_kjp என்ற ட்விட்டர் பக்கத்தில் புகார் வந்ததையடுத்து, மாநிலச் சாலை பராமரிப்பு நிறுவனம் பெட்டாலிங் மாவட்டத்தில் பழுதுபார்க்கும் பணியை மேற்கொண்டது.

ஜனவரி 16 அன்று, டத்தோ மந்திரி புசார் அரசு நிர்வாகத்தின் கீழ் சாலைகளைப் பராமரித்தல் மற்றும் விரிவுபடுத்துதல் ஆகியவற்றை உள்ளடக்கிய சாலை மேம்பாடு திட்டங்களுக்கு RM50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார்.

டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி, ட்விட்டர் மூலம் தங்கள் இடங்களில் சேதமுற்ற  சாலைகள் குறித்து புகார் அளிக்க  மக்களை ஊக்குவித்துள்ளார்.

முன்னதாக, உள்கட்டமைப்பு எஸ்கோ   இஷாம் அசிம், பயனர்களின் வசதிக்காக இந்த மார்ச் மாதம் முதல் மாநிலம் முழுவதும் பெரிய அளவிலான சாலைகளை மேம்படுத்தும் பணி செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.