ஷா ஆலம், மார்ச் 23- ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் (எம்.பி.எஸ்.ஏ.) ஏற்பாட்டிலான நடமாடும் முகப்பிட சேவை இங்குள்ள செக்சன் யு13 லோட்டஸ் செத்தியா ஆலம் கார் நிறுத்துமிடத்தில் வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.‘ஷா ஆலம் ஒன் வீல்ஸ்‘ எனப்படும் இந்த சேவை காலை 11.00 மணி
முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று மாநகர் மன்றத்தின் வர்த்தக மற்றும் பொது உறவுப் பிரிவின் தலைவர் ஷாரின் அகமது கூறினார்.
மாநகர் மன்றம் சம்பந்தப்பட்ட பணிகளை அலுவலகத்திற்கு வராமல் வார இறுதி நாட்களில் கவனிப்பதற்கு ஏதுவாக இந்த நடமாடும் முகப்பிடச் சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
மதிப்பீட்டு வரியைச் சரி பார்த்து செலுத்துவது, கார் நிறுத்துமிட அபராதங்களை செலுத்துவது, புகார்களை தெரிவிப்பது மற்றும் லைசென்ஸ் விண்ணப்பங்களின் நிலையை அறிந்து கொள்வது உள்ளிட்ட பணிகளை இந்த நடமாடும் முகப்பிடத்தில் பெறலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
நிலுவையில் உள்ள அபராதத் தொகையை செலுத்துவது உள்ளிட்ட பணிகளை பொது
மக்கள் எளிதாக மேற்கொள்வதற்கு ஏதுவாக இத்தகைய நடமாடும் முகப்பிடச் சேவைகளை மாநகர் மன்றம் இதற்கு முன்னர் பல இடங்களில் நடத்தியுள்ளது.
SELANGOR
ஷா ஆலம் செக்சன் யு13, லோட்டஸ் செத்தியா ஆலமில் எம்.பி.எஸ்.ஏ.வின் நடமாடும் முகப்பிடச் சேவை
23 மார்ச் 2023, 3:55 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
வறுமையை ஒழிக்கும் முயற்சியில் வணிக உதவிகள் முடிவல்ல; பொருளாதார முன்னேற்றத்திற்கான தொடக்கம் – பாப்பாராய்டு
Nadhirah Fattah
29 அக்டோபர் 2026

selangor
சிலாங்கூர் சுல்தானின் வெள்ளி விழா: சிறப்பு அஞ்சல் தலைகள் வெளியீடு
Nadiah Zamlus
29 அக்டோபர் 2026

selangor
சிலாங்கூரின் இயற்கை தலங்களுக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சி: அமிருடின்
Siti Rohaizah Zainal
29 அக்டோபர் 2026

selangor
சிலாங்கூரில் நவம்பர் 6-இல் தீபாவளி பொது உபசரிப்பு; 10,000 பேர் வருகை தர இலக்கு
Shalini Rajamogun
27 அக்டோபர் 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



