SELANGOR

பொழுதுபோக்கு மைதானம் RM39,000 செலவில் மேம்படுத்தப்பட்டது - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

22 மார்ச் 2023, 11:43 AM
பொழுதுபோக்கு மைதானம் RM39,000 செலவில் மேம்படுத்தப்பட்டது - பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 22: வடக்கில் உள்ள SS20 இல் வசிப்பவர்கள், இம்மாத தொடக்கத்தில் அப்பகுதியில் உள்ள பொழுதுபோக்கு மைதானம் முழுமையாக மேம்படுத்தப் பட்டதால், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த திட்டத்திற்காகப் பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி RM39,000 ஒதுக்கியதாகப் பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர் கூறினார்.

“இந்த மைதானம் குடியிருப்பாளர்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப மேம்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, குடியிருப்புவாசிகள் இதனைப் பயன்படுத்திக் கொண்டு, நல்முறையில் பாதுகாப்பார்கள் என நம்பிக்கை தெரிவித்தார்.

இதற்கிடையில், SS20 குடியிருப்போர் சங்கத்தின் செயலாளர் டத்தின் நோர்சியா சுலைமான், பிரதிநிதிகள், பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மற்றும் பொழுதுபோக்கு மைதானத்தை மேம்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

"இந்த மைதானம் குடியிருப்பாளர்கள் மட்டுமல்ல, அருகில் உள்ள பள்ளி மாணவர்களும் பயன்படுத்துகின்றனர், மேலும் இங்கு பொழுது போக்கிற்காகவும் ஓய்வெடுக்கவும் வயதானவர்கள் வருகின்றனர்," என்று அவர் கூறினார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.