SELANGOR

ராஜா மூடா சிலாங்கூர் தலைமையில் (மென்ஜுஞ்ஜோங் காசிஹ் 2022) சைக்கிள் ஓட்டம் இன்று நடைபெற்றது

19 மார்ச் 2023, 8:40 AM
ராஜா மூடா சிலாங்கூர் தலைமையில் (மென்ஜுஞ்ஜோங் காசிஹ் 2022) சைக்கிள் ஓட்டம் இன்று நடைபெற்றது

கிள்ளான், மார்ச் 19: மேன்மை தங்கிய ராஜா மூடா சிலாங்கூர் தெங்கு அமீர் ஷா அவர்கள் இன்று நடைபெற்ற சைம் டார்பியின் 50ஆம் ஆண்டின் கொண்டாட்ட 50 கிமீ தூர மென்ஜுன்ஜோங் காசிஹ் 2022 சைக்கிலோட்டத்தில் பங்கேற்றார்.

இங்குள்ள பண்டார் புக்கிட் ராஜாவில் உள்ள சைம் டார்பி விற்பனைக் காட்சியகத்தில் காலை 8.20 மணியளவில் 938 பங்கேற்பாளர்களுடன் அந்நிகழ்வு தொடங்கியது.

அரச நகரைச் சுற்றியுள்ள பல வரலாற்றுப் பகுதிகளைக் கடக்கும் சைக்கிள் ஓட்டும் இந்நிகழ்வின் மூன்றாவது பதிப்பை கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் நிறைவு செய்தார்.

தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஃபிர்டௌஸ் அர்ஷாட் கூறுகையில், கிள்ளான் மாநகராட்சி (எம்பிகே) மற்றும் சைம் டார்பி சொத்துடமையுடன் இணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சி கிள்ளான் மக்களின் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த உதவுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.