SELANGOR

இலவச முடி திருத்தும்  திட்டம் ஏற்பாடு - அம்பாங் ஜெயா மாநகராட்சி

19 மார்ச் 2023, 1:43 AM
இலவச முடி திருத்தும்  திட்டம் ஏற்பாடு - அம்பாங் ஜெயா மாநகராட்சி

ஷா ஆலம், மார்ச் 19: அம்பாங் நாடாளுமன்றச் சேவை மையம் இன்று அம்பாங் ஜெயா மாநகராட்சியில் (எம்பிஏஜே) உள்ள ஃபுட் கோர்ட்டில், பள்ளிக்கூட மாணவர்களுக்கு இலவச முடி திருத்தும்  நிகழ்வு  ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

காலை 10 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இந் நிகழ்வு நடைபெறும் என அம்பாங் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் இலியாஸ் ஜமீல் தெரிவித்தார்.

"இந்தத் திட்டம் உண்மையில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது, வாய்ப்பு இருந்தால் அம்பாங் குடியிருப்பாளர்கள் பங்கேற்கலாம்.

"நாங்கள் ஐந்து முடி திருத்துபவர்களை தயார் செய்துள்ளோம், மேலும் 100 முதல் 150 பேர் இந்நிகழ்வில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கிறோம்," என்று அவரைத் தொடர்பு கொண்டபோது கூறினார்.

இலியாஸின் கூற்றுப்படி, இந்த நிகழ்ச்சி அம்பாங் ஜெயா மாநகராட்சி உடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"அம்பாங் ஜெயா மாநகராட்சி இந்த திட்டத்திற்கு அவ்விடத்தில் இன்னும் காலியாக உள்ள கடைகளை பயன்படுத்த அனுமதித்தது.

இன்று மதியம் அம்பாங்  நாடாளுமன்ற  உறுப்பினர் மாண்புமிகு ரோட்சியா இஸ்மாயில்  இந்த நிகழ்வுக்கு வருகை புரிவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.