ஷா ஆலம், மார்ச் 16: ஷா ஆலம் மாநகராட்சி நாளை ஏற்பாடு செய்துள்ள வாடிக்கையாளர் சந்திப்பு தினம் ஐ -சிட்டி லெவல் G ஃபோயரில் நடைபெறவுள்ளது (படினி கான்செப்ட் ஸ்டோர் எதிரில்). இந்நிகழ்வு நாளை காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
கார்ப்பரேட் மற்றும் மக்கள் தொடர்பு பிரிவின் தலைவர், இந்தத் திட்டம் ஷா ஆலம் மாநகராட்சி நிர்வாகப் பகுதியில் உள்ள புகார்கள் மற்றும் சிக்கல்களைத் தெரிவிக்கப் பொதுமக்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கும் நோக்கத்திற்காக ஏற்பாடு செய்யப் பட்டதாகக் கூறினார்.
"மேலும், எம் பிஎஸ்ஏ சாலைப் போக்குவரத்து ஆணை 2007ன் கீழ் வாகனங்கள் நிறுத்தும் தொடர்பான அபராதங்களுக்கு 30 சதவீதக் குறைப்பு பெற பொதுமக்களுக்கு வாய்ப்பு உள்ளது.
"முதல் 50 வாடிக்கையாளர்களுக்கு இலவச தண்ணீர் போத்தல்கள் வழங்கப்படும்" என்று ஷாரின் அஹ்மட் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டு வரி, அபராதங்கள் மதிப்பாய்வு மற்றும் கட்டண சேவை, வளாகத்தை மாற்றி அமைப்பதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பலவற்றிற்கான தளத்தை இந்நிகழ்வு வழங்குகிறது.
"உரிமம் வழங்கும் துறை, நிலப்பரப்புத் துறை, திடக்கழிவு மேலாண்மை மற்றும் பொதுச் சுத்திகரிப்புத் துறை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை உட்பட பல்வேறு ஷா ஆலம் மாநகராட்சியின் உள் துறைகள் இந்தத் திட்டத்தில் பங்கேற்கும்.
இந்த நிகழ்ச்சிக்கு மக்கள் திரளாக அழைக்கப்படுகிறார்கள், என்றார்.








